தோழர்களும் சில உளறல்களும்
இப்பவெல்லாம் வலைப்பதிவுகளில அதிகம் பயன்படுத்தப்படும் சொற்கள் பட்டியலில பார்ப்பான், பாசிசத்துக்கு அடுத்தபடியா தோழர் எண்ட சொல்லுத்தான் வருமெண்டு நினைக்கிறன். அந்தளவுக்கு மலிஞ்சு கிடக்கு.
சரி, சொல்லிறவன் சொல்லட்டும்; அது அவங்கட உரிமை.
ஆனா எங்களைப் பாத்தும் உப்பிடிக் கூப்பிட வெளிக்கிடேக்க உடம்பில ஏதோ ஊருற மாதிரியோர் உணர்வு, 'சார்' எண்டு ஒருத்தன் கூப்பிடேக்க வாற மாதிரி. ஏனெண்டு தெரியேல.
ஏதோ பெரிய புரட்சியாளர்கள் தங்களுக்குள்ள கூப்பிடுற ஒரு சொல்லாத்தான் நாங்கள் முந்தி அதை நினைச்சிருந்தனாங்கள். இப்ப என்னடாண்டா, 'டேய் மச்சான்" எண்டு ஒருத்தனைக் கூப்பிட்டுக் கதைக்கிற மாதிரித்தான் உந்த 'தோழர்' எண்ட சொல்லும் வந்திட்டுது.
சரி, கதைக்கட்டும். ஆனா இன்னமும் அந்தச் சொல்லுக்கு வித்தியாசமான பரிமாணம் இருப்பதாக நினைத்துக்கொண்டு சிலர் பயன்படுத்துவதுதான் எரிச்சலைத் தருகிறது. அந்தச்சொல் மிகச்சாதாரணமான சொல்லாகப் போனதற்கு 'தோழர்களே'தான் காரணம்.
சரி, அது கிடக்கட்டும்.
உந்த தோழர் எண்ட சொல்லை வைச்சு முந்தி நடந்த சுவாரசியமான சம்பவமொண்டைச் சொல்லலாம் எண்டுதான் இப்ப இதை எழுத வெளிக்கிட்டன். உண்மைச் சம்பவம்தான், ஆனா செவிவழிக் கேட்டதில சில விசயங்கள் மாறிப்போயிருக்கலாம்.
எண்பதுகளில புலிகள் இயக்கத்தைத்தவிர மிச்ச ஆக்கள் தங்களுக்குள்ள தோழர் எண்டுதான் கூப்பிட்டுத் திரிஞ்சவை. இதில புளொட் முக்கியமான இயக்கம். ஒரு நாளைக்கு எத்தினை தரம் தோழர் எண்ட சொல்லைச் சொல்லுகினமோ அந்தளவுக்கு அவைக்கு புள்ளிகள் ஏதாவது வழங்கப்பட்டுதோ தெரியேல. ஏனெண்டா அப்பிடித்தான் அவையின்ர கதை இருக்கும். ஒரு வசனத்திலயே ரெண்டு தரம் அந்தச் சொல் வரும்.
"தோழர், சாப்பிட்டாச்சோ தோழர்?"
அப்ப ஆராவது தோழர் எண்டு கதைச்சா அவையள் புலிகள் இயக்கத்தைவிட வேறு இயக்கத்தைச் சேர்த்தவர்கள் என்பதுதான் அனைவரினதும் புரிதல்.
அந்தக் காலப்பகுதியில புலிகள் இயக்கத்தில "போளர்' எண்ட பேரால அழைக்கப்படுற ஒருத்தர் இருந்தவர். (இப்பவும் இருக்கிறார் எண்டு நினைக்கிறன்) பட்டப்பேரோ அல்லது அதுதான் இயக்கப்பேரோ தெரியாது; ஆனால் அந்தப் பேரால மட்டும் தான் அவர் அறியப்பட்டிருந்தார்.
இப்பிடியா இருந்துவாற காலத்தில மன்னாரில ஓர் இராணுவமுகாமை அடிக்கிறதுக்கு இயக்கம் திட்டம் போட்டுது. இயக்கமெண்டா புலிகள் இயக்கம். அப்ப புலிகளுக்கும் புளொட்டுக்கும் முறுகீட்டுது. கண்ட இடத்தில அடிபாடுகள் எண்டு பிரச்சினை தொடங்கீட்டுது.
இந்த நிலையிலதான் புலிகள் அந்த முகாமை அடிக்கிறதுக்குப் போயிருக்கினம். ஆமியின்ர நல்ல காலத்துக்கு புளொட்டும் அதே காம்பை அடிக்கிறதுக்கு ஆதேநாள் இரவு போயிருக்கு. ஆமிக்கு ஏன் நல்ல காலம் எண்டு கேக்கிறியளோ, அங்கதான் விசயம் இருக்கு.
புலிகளின்ர தாக்குதலணியில போளர் ஓர் அணியைக் கொண்டு போயிருந்தார்.
இரவுநேரம் அணிகள் பிரிஞ்சு இலக்கு நோக்கி நகர்ந்திருக்கு. அப்ப அஞ்சாறு பேர் கொண்ட சின்னச்சின்ன அணிகள்தாம்.
அப்ப நகர்ந்துகொண்டிருந்த ரெண்டு அணிகள் எதேச்சையா முட்டுப்பட்ட உடன, அடையாளப்படுத்திறதுக்கு "ஆராள்?' எண்டு கேக்கப்பட்டது.
"அது நான் போளர்" எண்டு பதில் வந்திருக்கு.
ஆனா இஞ்சால்பக்கம் அது 'தோழர்' எண்டு கேட்டிட்டுது.
கேட்ட அணி புளொட், பதில் சொன்னது புலி. ஆனா ரெண்டு அணியுமே தங்கட ஆக்கள்தான் எண்டிட்டு ஒண்டாச் சேந்து நகர வெளிக்கிடேக்கதான் விசயம் விளங்கீச்சு.
பிறகென்ன?
ஆமியை அடிக்கப்போய் தங்களுக்க அடிபட்டுக்கொண்டு ரெண்டு கோஷ்டியும் திரும்பி வந்திட்டுது. ஆமிக்கு நல்லகாலம் தானே?

Labels: தோழர், பதிவர் வட்டம், புண்ணாக்கு, புரட்சி, போளர், றோளர்
இதுபோன்ற பதிவுகள் சுவாரஸ்யமாகத்தான் உள்ளது.
உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பகிடிக்கும் நக்கலுக்கும் எங்கடை ஆக்களை விட்டால் வேறு யார்?
அதுதான் இந்த அடி வாங்குகிறோம் தோழர்:)
Posted by theevu | 10/08/2007 12:37 PM
தீவுத்தோளர் நீங்களும் எங்களை மாதிரி எருமைத்தோலர்தானோ? எங்கை உங்கட வாலைக் குடுங்கோ. குலுக்கிக்கொள்வோம்.
அந்த மாதிரி அடி அடிச்சு இந்த மாதிரி மழை கிழித்தாலும் தோல் சுழிக்கும் சுரணை எங்களுக்கு வராது கண்டியளோ?
ஆயிரம் அராஜகரர் கண்ட அருமை எருமைத்தோலர் நாமே :)
Posted by Anonymous | 10/08/2007 7:56 PM
தீவு,
வருகைக்கு நன்றி.
சம்பவம் நடந்தது உண்மைதான். ஆனால் நடந்தவிதம் குறித்துக் குழப்பமாக இருக்கிறது. (அதாவது போளர் என்பதை தோழர் என விளங்கி புலிகளே தங்களுக்குள் சுடுபட்டார்களா அல்லது நான் இடுகையிற் சொன்னதுபோல்தான் நடந்ததா என்பதே குழப்பம்)
நக்கலுக்காகவா இந்த அடி வாங்குகிறோம்?
Posted by சூரமணி | 10/12/2007 5:53 PM
//தீவுத்தோளர் நீங்களும் எங்களை மாதிரி எருமைத்தோலர்தானோ? எங்கை உங்கட வாலைக் குடுங்கோ. குலுக்கிக்கொள்வோம்.
அந்த மாதிரி அடி அடிச்சு இந்த மாதிரி மழை கிழித்தாலும் தோல் சுழிக்கும் சுரணை எங்களுக்கு வராது கண்டியளோ?
ஆயிரம் அராஜகரர் கண்ட அருமை எருமைத்தோலர் நாமே :)
//
அண்ணை, வருகைக்கு நன்றி.
தோழர், தோளர், தோலர்
எல்லாச் சொற்களும் இந்தப் பதிவில வந்திட்டுது.
எங்களைவிடவும் அதிகளவு காலம் இணையத்தில சுழண்ட உங்களுக்கு தோல் கொஞ்சம் தடிப்புத்தான்.
;-)
எல்லாம் நீங்கள் காட்டின வழியண்ணை.
Posted by சூரமணி | 10/14/2007 8:46 PM
Post a Comment