Wednesday, December 05, 2007

'வேல்' படம் பார்த்துக் கெட்ட சிறிலங்கா அரசாங்கம்

கடந்த நவம்பர் 28 ஆம் நாள் கொழும்பில் குண்டுவெடிப்பொன்று நிகழ்ந்ததில் 18 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்திருந்தனர்.
அந்தக் குண்டுவெடிப்புப் பற்றிய மேலதிக செய்தியொன்று இணையத்தளத்தில் (புதினம்?) வந்திருந்தது.

அந்த அங்காடிக்கு வந்த ஒருவர் குறிப்பிட்ட பையொன்றைக் கொடுத்துவிட்டு அங்காடிக்குள் சென்றுள்ளார். பின் சிறிது நேரத்தின்பின் வெளியே வந்த அவர் பையை வாங்காமல் சென்றுள்ளார். முன்பு பையைக் கையளித்துவிட்டுச் சென்றவர் அவர்தான் என அடையாளம் கண்ட பணியாளரால், பையை வாங்கிச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்ட போதும்கூட அவர் பையை வாங்காமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பணியாளர் காவல்துறைக்கு அறிவித்தார். பின்னர் குண்டு செயலிழக்கச் செய்யும் அணியோடு காவல்துறை அங்கு வந்தது. குண்டைச் செயலிழக்கச் செய்ய முற்பட்டபோது குண்டுவெடித்ததில் அவ்வங்காடியில் இருந்தவர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் பலர் காயமடைந்தனர்.

மேற்படிச் செய்தி உண்மையானால் சிறிலங்கா அரசாங்கத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் அணியின் முட்டாள்தனத்தை என்னவென்பது?
குண்டைச் செயலிழக்கச் செய்யுமுன்னர் நியம ஒழுங்கொன்றுள்ளது. இது எல்லாச்சந்தர்ப்பங்களிலும் பொருந்தும். முதலில் அங்கிருந்து அனைவரையும் வெளியேற்ற வேண்டும். செயலிழக்கச் செய்யப்போகும் குண்டு வெடித்தால் ஏற்படும் சேதங்களை இயலுமானவரை குறைக்க முயற்சிகள் மேற்கொண்ட பின்னரே அதைச் செயலிழக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அப்பணியில் குண்டுவெடித்தால் அதைச் செயலிழக்கச் செய்ய எத்தனித்தவர்(கள்) மட்டுமே கொல்லப்பட வேண்டும். இது உலகப் பொது நடைமுறை. இதைக்கூடக் கைக்கொள்ளத் தெரியாமல் பல பொதுமக்களைக் கொலைசெய்துள்ளது அந்தக் குண்டு செயலிழக்கச் செய்யும் குழு.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு குண்டைச் செயலிழக்கச் செய்வதற்கான நிகழ்தகவு நூறு வீதமிருப்பதில்லை. ஐம்பது வீதம் கூட இருப்பதில்லை. அதுவும் பிறரால் பொருத்தப்பட்ட குண்டைப்பொறுத்தவரை - அதன் பொறியமைப்பு, செயற்பாடு என்பவை தெரியாமலிருப்பதால் - இது சாத்தியமேயில்லை. படங்களில் காட்டுவதைப்போல் ஒரு வயரை வெட்டிவிட்டால் எல்லாம் சரி என்பதல்ல. வயரை வெட்டினால் வெடிக்கக்கூடியதாக ஒரு பொறியமைப்பைத் தயாரிக்க அதிகம் மினக்கெடத் தேவையுமில்லை.

சரி, இந்த முட்டாள்தனமான யோசனையை சிறிலங்காவின் குண்டு செயலிழக்கச் செய்யும் குழு எங்கிருந்து பெற்றிருக்கும்? எக்காரணி அவர்களை இப்படியொரு வேலையைச் செய்யத்தூண்டியிருக்குமென்று நாம் புலனாய்ந்ததில் கிடைத்த விடைதான் 'வேல்' என்ற பெயரோடு அண்மையில் வெளிவந்த தமிழ்த்திரைப்படம்.

அப்படத்தில் சர்க்கரை ஆலையொன்றில் குண்டைப் பொருத்திவிடுவார்கள். அது வெடிக்கப்போகிறது. குண்டுபொருத்தப்பட்ட விசயத்தைக் கண்டுபிடித்த நாயகன் உரியவர்களுக்குச் சொல்லி, குண்டு செயலிழக்கச்செய்யும் அணியையும் அழைத்துவந்துவிடுவார். குண்டு வைக்கப்பட்டுள்ள செய்தியைக் கேட்டதும் ஆலையில் வேலை பார்க்கும் மக்கள் அனைவரும் வெளியேறி ஓடிவிடுவார்கள்.
பின்னர் நாயகனும் அவரது அடிதடிகளும் காவல்துறையும் சில நாய்களும் சேர்ந்து குண்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள். நாயகனுட்பட அனைவரும் குண்டைச்சுற்றி புடைசூழ்ந்து நின்றுகொண்டு கண்கொட்டாமல் குண்டையே பார்த்திருக்க, அதிலிருக்கும் ஒரு வயரை வெட்டி அதைச்செயலிழக்கச் செய்வார் பொறியியலாளர்.

இந்தக் காட்சிதான் சிறிலங்காவின் குண்டு செயலிழக்கச் செய்யும் அணியையும் குழப்பியிருக்க வேண்டுமென நாம் சந்தேகிக்கிறோம். ஆனாலும் அந்தப் படத்தில் ஆலையில் பணியாற்றிய அனைத்துப் பொதுமக்களையும் வெளியேற்றிய காட்சியையாவது விளங்கியிருந்தால் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.

+++++++++++++++

Labels: ,

Monday, October 08, 2007

தோழர்களும் சில உளறல்களும்

இப்பவெல்லாம் வலைப்பதிவுகளில அதிகம் பயன்படுத்தப்படும் சொற்கள் பட்டியலில பார்ப்பான், பாசிசத்துக்கு அடுத்தபடியா தோழர் எண்ட சொல்லுத்தான் வருமெண்டு நினைக்கிறன். அந்தளவுக்கு மலிஞ்சு கிடக்கு.
சரி, சொல்லிறவன் சொல்லட்டும்; அது அவங்கட உரிமை.

ஆனா எங்களைப் பாத்தும் உப்பிடிக் கூப்பிட வெளிக்கிடேக்க உடம்பில ஏதோ ஊருற மாதிரியோர் உணர்வு, 'சார்' எண்டு ஒருத்தன் கூப்பிடேக்க வாற மாதிரி. ஏனெண்டு தெரியேல.
ஏதோ பெரிய புரட்சியாளர்கள் தங்களுக்குள்ள கூப்பிடுற ஒரு சொல்லாத்தான் நாங்கள் முந்தி அதை நினைச்சிருந்தனாங்கள். இப்ப என்னடாண்டா, 'டேய் மச்சான்" எண்டு ஒருத்தனைக் கூப்பிட்டுக் கதைக்கிற மாதிரித்தான் உந்த 'தோழர்' எண்ட சொல்லும் வந்திட்டுது.

சரி, கதைக்கட்டும். ஆனா இன்னமும் அந்தச் சொல்லுக்கு வித்தியாசமான பரிமாணம் இருப்பதாக நினைத்துக்கொண்டு சிலர் பயன்படுத்துவதுதான் எரிச்சலைத் தருகிறது. அந்தச்சொல் மிகச்சாதாரணமான சொல்லாகப் போனதற்கு 'தோழர்களே'தான் காரணம்.

சரி, அது கிடக்கட்டும்.

உந்த தோழர் எண்ட சொல்லை வைச்சு முந்தி நடந்த சுவாரசியமான சம்பவமொண்டைச் சொல்லலாம் எண்டுதான் இப்ப இதை எழுத வெளிக்கிட்டன். உண்மைச் சம்பவம்தான், ஆனா செவிவழிக் கேட்டதில சில விசயங்கள் மாறிப்போயிருக்கலாம்.

எண்பதுகளில புலிகள் இயக்கத்தைத்தவிர மிச்ச ஆக்கள் தங்களுக்குள்ள தோழர் எண்டுதான் கூப்பிட்டுத் திரிஞ்சவை. இதில புளொட் முக்கியமான இயக்கம். ஒரு நாளைக்கு எத்தினை தரம் தோழர் எண்ட சொல்லைச் சொல்லுகினமோ அந்தளவுக்கு அவைக்கு புள்ளிகள் ஏதாவது வழங்கப்பட்டுதோ தெரியேல. ஏனெண்டா அப்பிடித்தான் அவையின்ர கதை இருக்கும். ஒரு வசனத்திலயே ரெண்டு தரம் அந்தச் சொல் வரும்.
"தோழர், சாப்பிட்டாச்சோ தோழர்?"
அப்ப ஆராவது தோழர் எண்டு கதைச்சா அவையள் புலிகள் இயக்கத்தைவிட வேறு இயக்கத்தைச் சேர்த்தவர்கள் என்பதுதான் அனைவரினதும் புரிதல்.

அந்தக் காலப்பகுதியில புலிகள் இயக்கத்தில "போளர்' எண்ட பேரால அழைக்கப்படுற ஒருத்தர் இருந்தவர். (இப்பவும் இருக்கிறார் எண்டு நினைக்கிறன்) பட்டப்பேரோ அல்லது அதுதான் இயக்கப்பேரோ தெரியாது; ஆனால் அந்தப் பேரால மட்டும் தான் அவர் அறியப்பட்டிருந்தார்.

இப்பிடியா இருந்துவாற காலத்தில மன்னாரில ஓர் இராணுவமுகாமை அடிக்கிறதுக்கு இயக்கம் திட்டம் போட்டுது. இயக்கமெண்டா புலிகள் இயக்கம். அப்ப புலிகளுக்கும் புளொட்டுக்கும் முறுகீட்டுது. கண்ட இடத்தில அடிபாடுகள் எண்டு பிரச்சினை தொடங்கீட்டுது.

இந்த நிலையிலதான் புலிகள் அந்த முகாமை அடிக்கிறதுக்குப் போயிருக்கினம். ஆமியின்ர நல்ல காலத்துக்கு புளொட்டும் அதே காம்பை அடிக்கிறதுக்கு ஆதேநாள் இரவு போயிருக்கு. ஆமிக்கு ஏன் நல்ல காலம் எண்டு கேக்கிறியளோ, அங்கதான் விசயம் இருக்கு.

புலிகளின்ர தாக்குதலணியில போளர் ஓர் அணியைக் கொண்டு போயிருந்தார்.

இரவுநேரம் அணிகள் பிரிஞ்சு இலக்கு நோக்கி நகர்ந்திருக்கு. அப்ப அஞ்சாறு பேர் கொண்ட சின்னச்சின்ன அணிகள்தாம்.
அப்ப நகர்ந்துகொண்டிருந்த ரெண்டு அணிகள் எதேச்சையா முட்டுப்பட்ட உடன, அடையாளப்படுத்திறதுக்கு "ஆராள்?' எண்டு கேக்கப்பட்டது.
"அது நான் போளர்" எண்டு பதில் வந்திருக்கு.
ஆனா இஞ்சால்பக்கம் அது 'தோழர்' எண்டு கேட்டிட்டுது.

கேட்ட அணி புளொட், பதில் சொன்னது புலி. ஆனா ரெண்டு அணியுமே தங்கட ஆக்கள்தான் எண்டிட்டு ஒண்டாச் சேந்து நகர வெளிக்கிடேக்கதான் விசயம் விளங்கீச்சு.

பிறகென்ன?
ஆமியை அடிக்கப்போய் தங்களுக்க அடிபட்டுக்கொண்டு ரெண்டு கோஷ்டியும் திரும்பி வந்திட்டுது. ஆமிக்கு நல்லகாலம் தானே?

Labels: , , , , ,

Thursday, May 17, 2007

குப்பி கடிப்பாரா வரவனையான்?

கூட்டாளி பொட்டி 'தேத்தண்ணி'க் கடையார் கடைஞ்சதைக் குடிச்ச மயக்கத்தில் கழிஞ்சு வைச்சார் வரவனையார். என்ன நடந்தது, நிகழ்ந்தது என்பன தெரியாமல் தோஸ்த்து சொல்லிட்டான் என்ற ஒரே காரணத்துக்காக சிஞ்சாச் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

"தோழர்"தான் கிசுகிசு இரவுக்கழுகு என்பதை யாரும் வரவனைக்குச் சொல்லிடாதங்கப்பா. மானஸ்தன், குப்பியக் கிப்பியக் கடிச்சிடப் போறாரு.
சம்பந்தமேயில்லாமல் தேத்தண்ணிக் கடைக்காரர் ஏன் 'மூத்தர' பதிவாளரில் அவதூறைப் பரப்பிப் பதிவிட வேணும் எண்ட கேள்வியை மனசுக்குள் கேட்டிருந்தாலே பொறிதட்டியிருக்கும். (அதற்கென்ன? இன்னொருத்தனுக்குத் தட்டிபோட்டுது எண்டு புலம்பிவிட்டாப் போச்சு. உள்ளநாட்டுத் திராவிட, அதிராவிடக் குஞ்சுகளின்ர ஜால்ராக்களோட கச்சேரி களைகட்டிவிடும்.)

வரவனையானுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
புலம்பினது ஒரு திராவிட ராஸ்கோலு எண்ட காரணத்துக்காகவே மற்றக் குஞ்சுகளும் இடிஞ்சது விடிஞ்சது தெரியாமல் சதிராட்டம் ஆடுதுகளெண்டுதான் நினைக்கத் தோன்றுது. குஞ்சுகளுக்கு இதெல்லாம் புதுசா என்ன? "பட்டை கிளப்பி" ஆடியபோதே பார்தாயிற்றே.

ஏதோ, சில புனித வி(பி)ம்பங்கள் நொருங்கியதால் மகிழ்ச்சி.

வாழ்க பின்+அவ் + ஈனத்துவம்.

வரவனையான்,
கடிக்கக் குப்பியில்லையென்றால் சொல்லவும். வன்னியிலிருந்து எடுப்பித்து அனுப்புகிறேன்.
அதுவரை, பொட்டி தேத்தண்ணிக் கடையாரிடம் ஏதாவது குடித்துக் கொண்டிருங்கள்.

==============================

வரவனையானின் பதிலிடுகை
புலிப்பாண்டி" அண்ணன் சூரமணி வாழ்க

Labels:

Thursday, January 25, 2007

மாற்றுக்கருத்து மாணிக்கத்தின் மடத்தனம்

வாகரையிலிருந்து புலிகள் வெளியேறியதை மையமாக வைத்து செய்தித் தொகுப்பொன்று மாற்றுக்கருத்து மாணிக்கத் தளமான தேனியில் உள்ளது.

வாகரையை கைப்பற்றியதா இராணுவம் அறிவிப்பு: கிழக்கில் முக்கிய தளங்களை இழந்து வெளியேறும் புலிகள்


என்ற தலைப்பில் அத்தொகுப்பு இருக்கிறது.

தொகுப்பில் பிரச்சினையில்லை. ஆங்காங்கே சொல்லப்பட்டவற்றைத் தொகுத்துச் சொல்லியுள்ளார்கள்.
ஆனால் அதில் ஒரு படம் போட்டுள்ளார்கள் பாருங்கள்.
இப்பதிவு எழுதப்படும்வரை அப்படம் இருந்தது.

கொல்லப்பட்டடி சிலரது உடல்கள் வயல்வெளியொன்றில் இருக்கின்றன. அதைச்சுற்றி பலர் நிற்கிறார்கள்.

செய்தித் தொகுப்புக்குச் சம்பந்தமாக புலிகள் கொல்லப்பட்டுக்கிடக்கும் படத்தைப் போட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால், வண்டவாளம் தெரிகிறது.

அப்படத்தில் கொல்லப்பட்டுக் கிடப்பவர்கள் சிங்கள இராணுவத்தினரும் கருணா கும்பலைச் சேர்ந்தவர்களும். சுற்றி நிற்பவர்கள் விடுதலைப்புலிகள்.

சில மாதங்களின் முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வாகனேரிக்குள் பெருமெடுப்பில் ஊடுருவலொன்றைச் செய்தன சிங்கள அரசபடையும் கூலிப்படையும். அது சம்பூர், மூதூர் பிரச்சினைகளுக்கும் முன்பு.
அதை வெற்றிகரமாக முறியடித்து பலரைக் கொன்று பல சடலங்களையும் கைப்பற்றியிருந்தனர் புலிகள். சிங்கள அரசு மிகவும் மூக்குடைபட்ட தாக்குதலது.
அத்தாக்குதலில் கொல்லப்பட்ட படையினரனும் கருணா கும்பலதும் சடலங்களைச் சுற்றி புலிகள் நின்று எடுத்து வெளியிட்ட படம்தான் தற்போது தேனியில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தித்தொகுப்போடு உள்ளது.

புலிப்பாசிசத்த எதிர்க்கவெண்டு உலகத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை நட்சத்தி்ரமான தேனிக்காரர் உப்பிடி சின்னப்பிள்ளைத்தனமா நடக்கலாமோ?

உடன அந்தப்படத்தை எடுத்துப்போட்டு, எங்கயாவது புலிகள் செத்துக்கிடக்கிற படத்தைப்போட்டு விடுங்கோ.

Sunday, December 03, 2006

யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது?

இந்தத் தலைப்பில் விசரன் கட்டுரை போட்டிருக்கிறார்.
அதில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வரமுதல் யாழ்ப்பாணத்தில் எந்தக் கொலைகளும் நடக்கவில்லையாம். எல்லாம் அமைதிப்பூங்காவாகத்தான் இருந்ததாம்.

இதைச் சொல்லிறதுக்கு ஒண்டில் இந்த விசரனுக்கு அறவே மறை கழன்றிருக்க வேண்டும் அல்லது திட்டமிட்டுப் புரட்டுச் சொல்லும் சிங்கள அடிவருடியாக இருக்க வேண்டும்.
யாழ்ப்பாணம் படையினரின் பிடியிற்சென்றபின் கொல்லப்பட்ட, காணாமற்போன நூற்றுக்கணக்கான இளையவர்களைப் பற்றி எந்த விவரமும் இவருக்குத் தெரியாதோ?
படைத்தரப்பால் கைதுசெய்யப்பட்டுக் காணாமற்போன எத்தனை நூறுபேர் இன்னமும் விவரமேயில்லாமல் போய்விட்டார்கள்?
இராணுவப் படைச்சிப்பாயே தாங்கள் செம்மணியில் மட்டும் இப்படிக் கைதுசெய்யப்பட்டுக் கொல்லப்பட்ட நானூறுபேரைப் புதைத்தோம் என்று நீதிமன்றில் சாட்சி சொல்லியதெல்லாம் எந்தக் காலத்தில்?

புலியை விமர்சிக்கலாம். அதை நேர்மையாய்ச் செய்ய வேண்டும். இது உள்ளநாட்டுப் பொய் புரட்டுக்களை அள்ளிவந்து கொட்டிவிட்டால் புலியை விமர்சித்தது ஆகிவிடுமா?
ஆம்! புலிகள் ஒப்பந்தத்தின்பின் மாற்றுக் குழுவினரைக் கொன்றார்கள். அது உண்மையான தகவல். அப்படியானவற்றைக் கொண்டு புலியை விமர்சியுங்கள். அவைவிட்டுவிட்டு பயங்கரவாத சிங்கள அரசுக்கு நல்லபிள்ளை வேடம்போட்டு உத்தமர்களாகக் காட்டி எதைச் சாதிக்கப்போகிறீர்கள்?

சிங்கள அரச தரப்பு ஒப்பந்தத்தை 2006 ஆம் ஆண்டுவரை சரியாகக் கடைப்பிடித்ததாம்.
அட்ரா சக்கையெண்டானாம் அம்மன் கோயில் புக்கையெண்டானாம்.
கையெழுத்திட்ட மறுநொடியிலிருந்து இன்றுவரை அரசதரப்பு ஒப்பந்தத்தை மீறித்தான் வந்துள்ளது. அது முழுமையாகச் செயற்படுத்தவேயில்லை. அது ரணில்காலமென்றாலும்சரி.
படையினர் முகாம்களுக்குள் முடங்கினர் என்று எழுந்தமானத்தில் சொன்னால் சரியா?
ஒப்பந்தம் குறிப்பிட்டபடி படையினர் விலகவேண்டிய இடங்களைவிட்டு விலகினார்களா?
எத்தனையாயிரம் குடும்பங்கள் யாழ்ப்பாணத்துக்குள்ளேயே இடம்பெயர்ந்து வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்?
சும்மா நாலு இடத்தைவிட்டு எழும்பி பக்கத்திலயே இன்னொரு இடத்தில குந்திப்போட்டு ஒப்பந்தம் நிறைவேற்றாச்சு எண்டு சொன்னா என்ன மாதிரி?
2006 க்கு முன்பேயே யாழ்ப்பாணத்தில் மட்டும் எத்தனையாயிரம் மீனவர்கள் சிங்களப்படையால் பாதிக்கப்பட்டார்கள்? மீன்பிடித்தடை ஏன் தளர்த்தப்படவில்லை?

திரும்பத் திரும்ப சிங்கள அரசை உத்தமராக்கும் முயற்சியில் உண்மைகளை மறைத்துப் பொய்யையும் புரட்டையும் அள்ளிவீசிக் கருத்துச் சொல்லிறியள். புலியை விமர்சிக்க உங்களுக்கிருக்கிற கருத்துலகப் பற்றாக்குறையைத்தான் இதுகள் சொல்லுதுகள்.


ஆனாலும் உண்மையை ஒத்துக்கொள்கிறார் இவர்.
யாழ்ப்பாணத்தில் மக்கள் அரசபடையினராலும் அதன் கூலிப்பட்டாளத்தாலும் கொல்லப்படுகிறார்கள் என்பதே அந்த ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.
சரியண்ணை, உங்கள கதைப்படியே கொல்லப்படுபவர்கள் புலிகளை ஆதரித்தவர்கள், மோட்டர்சைக்கிள் வாங்கிக் கொடுத்தவர்கள், அரசபடையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்.
இவர்களைக் கொல்வதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?
அப்படியானால் சிங்கள அரசை ஆதரிக்கும் எந்தப் பொதுமகனையும் கொல்லலாமா?
நல்ல கதையாக இருக்கிறதே?

இராணுவத்துக்கு எதிராகவோ அரசுக்கு எதிராகவோ மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி ஒரு போராட்டம் செய்தால் அவர்களைக் கொல்லலாம் என்கிறீர்கள், குறைந்தபட்சம் அக்கொலைகளை நியாயப்படுத்துகிறீர்கள்.
பிறகென்ன மண்ணாங்கட்டிக்கு ஜனநாயகம், மக்கள் புரட்சி, புண்ணாக்குப் பற்றிக் கதைக்கிறீர்கள்?
உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது அதைப்பற்றிக் கதைக்க?

உங்கள்போன்ற புலியெதிர்ப்புக் கும்பல்களுக்கு ஆயுதம் தாங்கிய அரசபடையிரைக் கொன்றாலே பொறுக்க முடியவில்லை.
குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்கிறீர்கள்.
ஹபரணையில் ஆயுதம் தாங்கிவந்த கடற்படையினர் நூறுபேரைக் கொன்றதுக்கு, மனிதபண்பற்ற தாக்குதல், நிராயுதபாணிகள் மீதான தாக்குதல் அது இது எண்டு ஒப்பாரி வைத்தீர்கள். ஏதோ அப்பாவிகள் கொல்லப்பட்டதாய் புலம்பினீர்கள். ஆயுதம் தரிக்காத படையிரைக் கொல்வது பிழையா என்ற கேள்வி ஒருபுறமிருக்கட்டும்.
ஆனால் அவர்கள் ஆயுதம் தாங்கிவந்தவர்கள் என்பதை பன்னாட்டுச் செய்திநிறுவனங்களே புகைப்படமெடுத்துப் பரப்பியபின்னும் விடாமல் அந்தப் பஞ்சப்பாட்டைப் பாடிக்கொண்டிருந்தீர்கள்.
படையினர் கொல்லப்படுவதற்கே கயிறு திரித்துக் கதறியழும் நீங்கள் அப்பாவி மக்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்படுவதை நியாயப்படுத்துகிறீர்கள்.
இதே நியாயத்தைச் சிங்களவருக்கும் சொல்லலாமா என்று யாராவது கேட்டால் என்ன செய்வீர்கள்?

புலியெதிர்ப்புக்காக எந்தப் புரட்டையும் சொல்லத் துணிந்த நீங்கள் தமிழர்கள்மேல் கரிசனை கொண்டவர்கள் என்று பம்மாத்துப்பண்ணிக் கருத்துச் சொல்வதுதான் வேடிக்கை.

உண்மைகளைப் பேசுங்கள். உண்மைகளைக் கொண்டு புலியை விமர்சியுங்கள்.

Sunday, November 05, 2006

புலிகளா பயந்தாங்கொள்ளிகள்?

புலிகள் பயந்தாங்கொள்ளிகள், பேடிகள், கையாலாகாதவர்கள் என்று தோழர் விசரன் விசனப்பட்டுப் பதிவு போட்டுள்ளார். அவர் மேற்கூறியவற்றுக்குச் சொல்லும் காரணங்களில் ஒன்று தற்கொலைத் தாக்குதல்.

சிறுபான்மை இனத்துக்காகப் போராடும் ஒரு போராட்ட இயக்கம், உலக வல்லரசுகளின் துணையுடன் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடும் எதிரியை முறியடிக்க, தனக்குரிய ஆள், ஆயுத வளங்களைப் பொறுத்து அவ்வப்போது பயன்படுத்தும் போர் உத்தியைப் புரிந்துகொள்ள முடியாத அப்பாவியாக விசரன் இருப்பாரென்று நம்ப முடியுமா?
விசரனுக்குத் தேவை என்னவென்று எங்களுக்குத் தெரியாதா?

சரி, யார் பயந்தாங்கொள்ளிகள் என்று பார்ப்போம்.
வீரம் மிக்க சிங்கள இராணுவத்தைப் புலிகளால் நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாததால் கோழைத்தனமான தற்கொலைத் தாக்குதலை நடத்துகிறார்களாம்.
யார் பயந்தாங்கொள்ளிகள்?
உயிரைத் துச்சமென மதித்து எதிரியைச் சிதறடிக்கும் புலிகளா பயந்தாங்கொள்ளிகள்?
உயிருக்குப் பயந்து புலிகள் வழியிலேயே ஒரு தாக்குதலைக்கூடச் செய்யத் தெரியாத சிங்களப்படைகளா வீரம் மிக்கவர்கள்?

இன்றும் கடலில் ஒரு தாக்குதல் நடந்தால் உடனே இந்தியாவின் மடிக்குள் ஓடி ஒழிந்துகொள்ளும் சிங்களப்படை இந்த விசரனுக்கு வீரப்படையாகத் தெரிகிறது. ஆனால் அவர்களை அன்னிய நாட்டிடம் தஞ்சமடைய வைக்கும் புலிப்படை கோழைப்படையாகத் தெரிகிறது.

யாழ்ப்பாணத்திலுள்ள தங்கள் பத்தாயிரக்கணக்கான படைகளைக் காப்பாற்றுங்கள் என்று இந்தியாவிடமும் உலகிடமும் ஒப்பாரிவைத்த சிங்களப்படை வீரதீரப்படையாம். உலகில் எந்த நாட்டுப்படைகளும் போராட்டக்குழுவிடமிருந்து காப்பாற்றும்படி இப்படிக் கெஞ்சிய சரித்திரமில்லை.
யாரையா பயந்தாங்கொள்ளிகள்?

இன்றுவரை எந்த நாட்டின் உதவியுமில்லாமல் தனித்துப் போராடி வருகிறது புலிகள் அமைப்பு. ஆனால் சிங்கள அரசோ உதவி பெறாத நாடில்லை. அனைத்து வல்லரசுகிளின் உதவிகளோடு போரிட்டும் அதனால் வெற்றி பெறமுடியவில்லை என்பதோடன்றி தோல்வியையும் தவிர்க்க முடிந்ததில்லை.
அமெரிக்கா, இஸ்ரேல், ரஸ்யா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் என்று அனைவரிடமும் கெஞ்சிக்கூத்தாடி, கடன்வாங்கி அவர்களின் ஆலோசனையோடு போரிடும் அரசுக்கெதிராக போரிட்டு அதை திகலூட்டும் புலிகள் கோழைகளாம். இத்தனையும் இருந்தும் பதுங்கிக்கிடக்கும் சிங்களப்படை வீரப்படையாம்.

புலிகளைக் கொல்லத் தெரியாமல் மக்கள்மீது குண்டுபோட்டுக் கொன்றுவிட்டு புலியைக்கொன்றதாகக் கணக்குக் காட்டிப் பிழைப்பு நடத்தும் சிங்களப்படையா வீரம் மிக்கது?
இதுவரை தாம் கொன்றதாகச் சிங்களப்படைகள் சொல்லிய கணக்கென்ன? வெறும் 7000 பேர் கொண்ட புலிகளை விரைவில் அழித்துவிடுவோம் என்று சரத் பொன்சேகா சொன்னபின் சிங்கள இராணுவத்தரப்பு வெளியிட்ட குறைந்தபட்ச புலிகளின் இழப்பு விவரம் 2200 பேர் சாவு, 3300 பேர் காயம். இன்னும் சிங்கள இராணுவம் யாருடன் போரிடுகிறது?
இப்படி உலகமகா பொய்களைச் சொல்லி சுகப்பட்டுக்கொள்ளும் சிங்கள இராணுவமா வீரம் மிக்கது?

புலிகளுடன் நேரடியாக மோதப்பயந்து மக்கள் மீது பொருளாதார - மருந்துத் தடைகளைப்போட்டு தன் எண்ணத்தைச் சாதிக்க முற்படுகிற சிங்கள இனவெறி அரசு எப்படி வீரப்படையாக இருக்குமென்பது அந்த விசரனுக்குத்தான் வெளிச்சம்.

சரி, விசரன் வழியிலேயே ஒரு விசர்க்கேள்வியைக் கேட்போம்.
புலிகளுடன் நேருக்கு நேர் மோதத் தைரியமில்லாமல் தானே சிங்களப்படை வான்வழியால் குண்டுவீசுகிறது? கொழும்புச் சிங்களக் கும்பலின் கையாலாகாத - பேடித்தனமான தாக்குதல் முறைதானே இந்த வான்தாக்குதல்? தைரியமிருந்தால் (ஆம்பிளையெண்டா, மீசை இருந்தால், எண்டு விரும்பின சொற்களைச் சேர்த்துக்கொள்ளவும்) வான்படைத்தாக்குதல் இல்லாமல் புலிகளுடன் மோதத் தயாரா?
பிறகெப்படி சிங்களப்படை வீரதீரப்படையாக இருக்க முடியுமென்று விசரன் தெளிவுபடுத்துவாரா?

அடுத்து, சிறுவர்களை வைத்துச் சண்டைபிடிக்கிறார்கள் என்று அதே கட்டுரையில் உளறியிருக்கிறார் விசரன்.
சரி, அவரின் கதைப்படி வைத்துக்கொண்டாற்கூட சின்னப்பிள்ளையளோட சண்டைபிடிக்கத் தெரியாத இராணுவத்தை - சின்னப்பிள்ளையளின்ர தாக்குதலைக்கண்ட உடன மூத்திரம் போற இராணுவத்தை எப்படி இந்த விசரன் வீர - தீர - பராக்கிரம இராணுவமாகச் சொல்கிறார்?

எல்லாம் விசரனுக்கே வெளிச்சம்.

Monday, September 25, 2006

India and it's dirty politics





சூளைமேட்டுக் கொலை வழக்கில்தேடப்படும்-இந்திய நீதிமன்றத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட-குற்றவாளி ஒருத்தருடன் இந்தியாவின் மேன்மைதகு பிரதமர் கைகுலுக்கும் காட்சியை விட இலங்கை விவகாரத்தில் இந்தியா செய்யும் dirty politics ஐ உறுதிப்படுத்த வேறு சான்று வேண்டுமோ.

ஏற்கனவே தனி விமானம் பிடித்து ENDLF காறர்களை இலங்கை அனுப்பியாச்சு அவர்களும் மட்டக்களப்பில் ஆடாத ஆட்டம் ஆடி கொள்ளையில் பங்குப் பிரச்சனையாகி கருணாவுடன் அடிபட்டு இப்ப யாழ்ப்பாணம் வவுனியாவில் நாள் பத்துக் கொலையும் அஞ்சாறு கொள்ளையுமாக கடைவிரித்திருக்கினமாம்

அது போதாதெண்டு பெண்பிடிகாரர் EPRLF ஐயும் அங்கே அனுப்புறதுக்கு டில்லியிலை வரதராஜப் பெருமாளோடு ஆலோசனை நடக்கிறதாம்.அவ்வளவும் இந்தியாவின் ஆசீர்வாதத்தோடு நடக்கிறது.

இங்கினை இருக்கிற இந்தியாவின் சனநாயகத் தன்மையில் சற்றும் குறை காண்கிலா இந்தியத் தேசியவாதிமார் மேலான கவனத்திற்கு இச்செய்தி சமர்ப்பணம்.

அண்ணையாணைச் சொல்லிப்போட்டன் வெங்காயத்தை உரிச்சு உரிச்சுப் பார்த்தால் கடைசியிலை ஒண்டும் மிஞ்சாது கண்ணெரிச்சல் தான் மிஞ்சும்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4