« Home | புலிகளா பயந்தாங்கொள்ளிகள்? » | India and it's dirty politics » | இராமப் பாம்புகளும் இராவண எதிர்ப்பும் » | ஊடகப் புழுகுகள் » | புலிகளின் பதில் என்ன? » | சூரமணி பேசுகிறேன். »

யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது?

இந்தத் தலைப்பில் விசரன் கட்டுரை போட்டிருக்கிறார்.
அதில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வரமுதல் யாழ்ப்பாணத்தில் எந்தக் கொலைகளும் நடக்கவில்லையாம். எல்லாம் அமைதிப்பூங்காவாகத்தான் இருந்ததாம்.

இதைச் சொல்லிறதுக்கு ஒண்டில் இந்த விசரனுக்கு அறவே மறை கழன்றிருக்க வேண்டும் அல்லது திட்டமிட்டுப் புரட்டுச் சொல்லும் சிங்கள அடிவருடியாக இருக்க வேண்டும்.
யாழ்ப்பாணம் படையினரின் பிடியிற்சென்றபின் கொல்லப்பட்ட, காணாமற்போன நூற்றுக்கணக்கான இளையவர்களைப் பற்றி எந்த விவரமும் இவருக்குத் தெரியாதோ?
படைத்தரப்பால் கைதுசெய்யப்பட்டுக் காணாமற்போன எத்தனை நூறுபேர் இன்னமும் விவரமேயில்லாமல் போய்விட்டார்கள்?
இராணுவப் படைச்சிப்பாயே தாங்கள் செம்மணியில் மட்டும் இப்படிக் கைதுசெய்யப்பட்டுக் கொல்லப்பட்ட நானூறுபேரைப் புதைத்தோம் என்று நீதிமன்றில் சாட்சி சொல்லியதெல்லாம் எந்தக் காலத்தில்?

புலியை விமர்சிக்கலாம். அதை நேர்மையாய்ச் செய்ய வேண்டும். இது உள்ளநாட்டுப் பொய் புரட்டுக்களை அள்ளிவந்து கொட்டிவிட்டால் புலியை விமர்சித்தது ஆகிவிடுமா?
ஆம்! புலிகள் ஒப்பந்தத்தின்பின் மாற்றுக் குழுவினரைக் கொன்றார்கள். அது உண்மையான தகவல். அப்படியானவற்றைக் கொண்டு புலியை விமர்சியுங்கள். அவைவிட்டுவிட்டு பயங்கரவாத சிங்கள அரசுக்கு நல்லபிள்ளை வேடம்போட்டு உத்தமர்களாகக் காட்டி எதைச் சாதிக்கப்போகிறீர்கள்?

சிங்கள அரச தரப்பு ஒப்பந்தத்தை 2006 ஆம் ஆண்டுவரை சரியாகக் கடைப்பிடித்ததாம்.
அட்ரா சக்கையெண்டானாம் அம்மன் கோயில் புக்கையெண்டானாம்.
கையெழுத்திட்ட மறுநொடியிலிருந்து இன்றுவரை அரசதரப்பு ஒப்பந்தத்தை மீறித்தான் வந்துள்ளது. அது முழுமையாகச் செயற்படுத்தவேயில்லை. அது ரணில்காலமென்றாலும்சரி.
படையினர் முகாம்களுக்குள் முடங்கினர் என்று எழுந்தமானத்தில் சொன்னால் சரியா?
ஒப்பந்தம் குறிப்பிட்டபடி படையினர் விலகவேண்டிய இடங்களைவிட்டு விலகினார்களா?
எத்தனையாயிரம் குடும்பங்கள் யாழ்ப்பாணத்துக்குள்ளேயே இடம்பெயர்ந்து வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்?
சும்மா நாலு இடத்தைவிட்டு எழும்பி பக்கத்திலயே இன்னொரு இடத்தில குந்திப்போட்டு ஒப்பந்தம் நிறைவேற்றாச்சு எண்டு சொன்னா என்ன மாதிரி?
2006 க்கு முன்பேயே யாழ்ப்பாணத்தில் மட்டும் எத்தனையாயிரம் மீனவர்கள் சிங்களப்படையால் பாதிக்கப்பட்டார்கள்? மீன்பிடித்தடை ஏன் தளர்த்தப்படவில்லை?

திரும்பத் திரும்ப சிங்கள அரசை உத்தமராக்கும் முயற்சியில் உண்மைகளை மறைத்துப் பொய்யையும் புரட்டையும் அள்ளிவீசிக் கருத்துச் சொல்லிறியள். புலியை விமர்சிக்க உங்களுக்கிருக்கிற கருத்துலகப் பற்றாக்குறையைத்தான் இதுகள் சொல்லுதுகள்.


ஆனாலும் உண்மையை ஒத்துக்கொள்கிறார் இவர்.
யாழ்ப்பாணத்தில் மக்கள் அரசபடையினராலும் அதன் கூலிப்பட்டாளத்தாலும் கொல்லப்படுகிறார்கள் என்பதே அந்த ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.
சரியண்ணை, உங்கள கதைப்படியே கொல்லப்படுபவர்கள் புலிகளை ஆதரித்தவர்கள், மோட்டர்சைக்கிள் வாங்கிக் கொடுத்தவர்கள், அரசபடையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்.
இவர்களைக் கொல்வதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?
அப்படியானால் சிங்கள அரசை ஆதரிக்கும் எந்தப் பொதுமகனையும் கொல்லலாமா?
நல்ல கதையாக இருக்கிறதே?

இராணுவத்துக்கு எதிராகவோ அரசுக்கு எதிராகவோ மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி ஒரு போராட்டம் செய்தால் அவர்களைக் கொல்லலாம் என்கிறீர்கள், குறைந்தபட்சம் அக்கொலைகளை நியாயப்படுத்துகிறீர்கள்.
பிறகென்ன மண்ணாங்கட்டிக்கு ஜனநாயகம், மக்கள் புரட்சி, புண்ணாக்குப் பற்றிக் கதைக்கிறீர்கள்?
உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது அதைப்பற்றிக் கதைக்க?

உங்கள்போன்ற புலியெதிர்ப்புக் கும்பல்களுக்கு ஆயுதம் தாங்கிய அரசபடையிரைக் கொன்றாலே பொறுக்க முடியவில்லை.
குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்கிறீர்கள்.
ஹபரணையில் ஆயுதம் தாங்கிவந்த கடற்படையினர் நூறுபேரைக் கொன்றதுக்கு, மனிதபண்பற்ற தாக்குதல், நிராயுதபாணிகள் மீதான தாக்குதல் அது இது எண்டு ஒப்பாரி வைத்தீர்கள். ஏதோ அப்பாவிகள் கொல்லப்பட்டதாய் புலம்பினீர்கள். ஆயுதம் தரிக்காத படையிரைக் கொல்வது பிழையா என்ற கேள்வி ஒருபுறமிருக்கட்டும்.
ஆனால் அவர்கள் ஆயுதம் தாங்கிவந்தவர்கள் என்பதை பன்னாட்டுச் செய்திநிறுவனங்களே புகைப்படமெடுத்துப் பரப்பியபின்னும் விடாமல் அந்தப் பஞ்சப்பாட்டைப் பாடிக்கொண்டிருந்தீர்கள்.
படையினர் கொல்லப்படுவதற்கே கயிறு திரித்துக் கதறியழும் நீங்கள் அப்பாவி மக்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்படுவதை நியாயப்படுத்துகிறீர்கள்.
இதே நியாயத்தைச் சிங்களவருக்கும் சொல்லலாமா என்று யாராவது கேட்டால் என்ன செய்வீர்கள்?

புலியெதிர்ப்புக்காக எந்தப் புரட்டையும் சொல்லத் துணிந்த நீங்கள் தமிழர்கள்மேல் கரிசனை கொண்டவர்கள் என்று பம்மாத்துப்பண்ணிக் கருத்துச் சொல்வதுதான் வேடிக்கை.

உண்மைகளைப் பேசுங்கள். உண்மைகளைக் கொண்டு புலியை விமர்சியுங்கள்.

well done! Keep it up.

Post a Comment

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4