« Home | சூரமணி பேசுகிறேன். »

புலிகளின் பதில் என்ன?

சிங்கள இனவெறியர்களால் குறைந்தது நாளுக்கு 20 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்! எங்கே யுத்தநிறுத்தம்? புலிகளின் பதில் என்ன? தமிழ்மக்கள் அங்கலாய்ப்பு!

- டேவிட்ஸரன் லண்டன்


சிறீலங்காவின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஸ பதிவியேற்றதிலிருந்து சிறிது சிறிதாக சமாதானத்துக்கான கதவுகள் மூடப்படத் தொடங்கின. இதன் பின்னணி மகிந்த ராஜபக்ஸவுடன் சூழவிருக்கும் ஜே.வி.பி, ஜாதிககெல உறுமைய தானென்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் இவர்களே தானென்று மகிந்த ராஜபக்ச ஆரம்பத்தில் கூறினாலும் சம காலத்தில் பல திரைமறைவு வேலைகளை முழு வீச்சில் முடுக்கி விட்டார். முழுவீச்சில் கட்டியெழுப்பப்பட்ட சிங்கள இராணுவ கட்டமைப்பு இன்று தனது கோர முகங்களை அப்பாவி தமிழ் மக்கள் மீது காட்டத் தொடங்கியுள்ளது.

ஆரம்பத்தில் ஓரிரு தமிழ் மக்களின் கொலைகளாகத் தொடங்கிய அடக்குமுறைப்பூதம் தற்போது தமிழ் மக்களின் பூர்வீக இருப்பிடங்கள் மீது இராணுவத் தாக்குதல்கள், விமானக் குண்டு வீச்சுக்கள் என்று பாடசாலைகள், வழிபாட்டுத்தலங்கள் கூடத் தப்ப முடியவில்லை. அண்மைக்காலங்களாக அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள், பாடசாலைச் சிறுவர்கள், அப்பாவி மக்கள் வகை தொகையற்று சிங்கள இராணுவத்தால் கொண்றொழிக்கப்படுவதும் அவர்களுக்கு புலிச்சாயம் பூசுவதும் வழமையாகியும் விட்டது. எல்லாவற்றிக்கு மேலாக கிழக்கு மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை கைப்பற்றுவதற்கும் பாரிய முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அவற்றில் சில வெற்றிகளையும் பெற்றிருக்கிறது. இவை எல்லாவற்றையும் சர்வதேசம் பார்த்தும் பாராமுகமாக இருக்கின்றது. இன்றைய நிலையில் ஒரு நாளைக்கு சராசரியாக 20 தமிழ் மக்கள் தங்கள் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசத்தில் சிங்களப் படைகளினால் கொல்லப்பட்டும், காணாமலும் போயும் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் யுத்த நிறுத்தத்தை புலிகள் கைவிடாதபடி சர்வதேச அழுத்தங்களை புலிகள் மீது தொடர்ந்து பிரயோகிக்கவும் சிறீலங்கா அரசு தவறவுமில்லை. இதன்படி தென் இலங்கையை யுத்தமற்ற பூமியாகவும், வட கிழக்கை இரத்த ஆறு ஓடும் பூமியாகவும் சாதுரியமாக மாற்றியிருக்கிறது சிறீலங்காவின் சிங்கள ஆட்சியாளர்கள். இச்சூழ்நிலையில் புலத்திலும், தாயகத்திலும் தமிழ் மக்கள் விரக்தியின் உச்சத்துக்கு சென்றிருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இச்சு10ழ்நிலை தொடருமாயின் புலத்தில் புலிகளின் மக்கள் ஆதரவுகள் மிகப் பாதிக்கப்படுவது மட்டுமின்றி புலிகளின் நிதி சேகரிப்புகள், பிரச்சாரங்கள் பாரிய அளவில் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது.

உலகில் பலஸ்தீனத்திலோ, லெபனானிலோ, காஸ்மீரிலிலோ நிகழ்ந்தவைகள்-நிகழ்பவைகளே சர்வதேசம் எங்குள்ளது என்ற கேள்விக்கு பதிலாக அமையும். இன்றைய சு10ழ்நிலையில் ஈழத்தில் புலிகளின் பலத்தில் தான் சர்வதேசத்தின் கரிசனையும் எமை நோக்கி திரும்ப வாய்ப்புள்ளது. புலிகள் இன்றைய சந்தர்ப்பத்தில் ஈட்டும் இராணுவ வெற்றிகளே தமிழர்களின் சர்வதேச அரசியலையும் தீர்மாணிக்கும் சக்தியுமாக்க உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையுமாகும். இவைகளுக்கான விடைகளை புலிகளிடம் இன்று தமிழ் மக்கள் எதிர் பார்க்கிறார்கள். இவற்றிற்கு புலிகளின் பதில்களாக தெற்கில் பல களங்களை திறக்கப் போகிறார்களா? தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களிலிருந்து அடித்து விரட்டப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் எனும் போர்வையில் இராணுவ குடியேற்றங்களாக்கப்பட்ட பிரதேசங்களை மீட்கப் போகிறார்களா? இல்லை ஒட்டு மொத்த சிங்களப் படைகளை தமிழர் தாயகத்திலிருந்து விரட்டியடிக்கப் போகிறார்களா? ... வரும் நாட்களில் தமிழர்களின் மொழி சிங்கள தேசத்துக்கு எவ்வாறு செல்லப் போவதிலேயே, சிங்கள இனவெறியாளர்களின் இன அழிப்புக்கள் முடிபுக்கு வர வாய்ப்புள்ளது.

நாங்கள் மாற்றுக்கருத்துகள் கொண்டவர்கள்தாம். புலிகளின் நடவடிக்கைகளை கையைக் கட்டிக் கொண்டு ஆதரிக்கவுமில்லை. ஆனால் புலிகளுக்காக தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட வேண்டுமென்ற வரலாற்றுத் துரோகத்தையும் செய்ய நாங்கள் தயாருமில்லை. இன்று மாற்றுக்கருத்தாளர்கள் நாமென்று எதிரியுடன் சேர்ந்து எம்மக்களுக்கு எதிராக ஆயுதங்களை தூக்கி எம்மக்களை படுகொலை செய்யும் வரலாற்றுத் துரோகிகளாக மாறவும் நாம் தயாரில்லை. இன்றைய சு10ழ்நிலையில் எமது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நாம் எமது பூரண ஆதரவினை தெரிவிக்கின்றோம். அது காலத்தின் கட்டாயமும் கூட. இதனிலிருந்து நாமும் விடுபட விரும்பவில்லை.


நன்றி: தேனி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4