« Home | ஊடகப் புழுகுகள் » | புலிகளின் பதில் என்ன? » | சூரமணி பேசுகிறேன். »

இராமப் பாம்புகளும் இராவண எதிர்ப்பும்

புலிகள் கிறித்தவர்களா இந்துக்களா என்று ஒருவர் அதி முக்கியமான கேள்வியை எழுப்பி, அவர்கள் கிறித்தவர்கள் என்று முடிவும் கொடுத்துவிட்ட கட்டுரையொன்றைப் போட்டிருந்ததோடு பின்னூட்டத்தில் அதுவே தனது கருத்தும் என்பதை வெளிப்படுத்தியருந்தார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு சந்தியா ஜெயின் இந்த்துவ இயக்கங்களால் புகழப்படும் 'அறிவி ஜீவி'எழுதிய கோமாளித்தனமான கட்டுரைக்கும் இதற்கும் எந்த வித்தியாசமுமில்லை.
ஆனால் பின்னூட்டங்களில் வந்த சில விசயங்கள் இவர்களின் புலிகள் மீதான இக்குற்றச்சாட்டுக்கும் வயிற்றெரிச்சலுக்குமான காரணத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டன.கீற்று இதழில் வந்த ஒருவிசயத்தைக் குறிப்பிட்டு அதைவைத்துப் புலிகளை இந்துத்துவ எதிர்ப்புவாதிகளாகக் காட்டி, அப்படியே கிறித்தவ இயக்கமாகவும் காட்டியிருந்தார்கள்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து சிங்கள அரசதரப்பாற் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கலைஞன் -கவிஞன் பொன் கணேசமூர்த்தி ஒரு நாடகம் எழுதினார். 'இலங்கை மண்' என்பது அதன்பெயர். அதன் சிலபகுதிகள் நாட்டுக்கூத்து வடிவிலும் எழுதப்பட்டன. இராமாயணப் பொய்மையைக் கட்டுடைக்கும் ஒரு கோணம் அதில் இருந்தது. வானொலி நாடகமாக ஒலிபரப்பப்பட்டதுடன் நூல் வடிவிலும் வெளியிடப்பட்டது. அந்நூலுக்கு இளங்குமரனும் (பேபி சுப்பிரமணியம்) பிரபாகரனும் வாழ்த்துரை எழுதியிருந்தனர்.

இங்கு புலிகளை கிறித்தவ அமைப்பென்று கட்டுரை பொறுக்கிப்போட்டு பின்னூட்ட விளம்பரம் செய்தவர்களுக்கு சூத்தில் காஞ்சோண்டி பூசிய எரிவைத் தந்தது இந்த நாடகம் தான். இராமனை வில்லனாகவும் இராவணனை நாயகனாகவும் வைத்து எழுதப்பட்ட நாடகம் இவர்களுக்கு சுள்ளென்ற கோபத்தைக் கொடுக்கிறதென்றால் இந்தப் பாம்புகள் எந்தப் புற்றிலிருந்து வருகின்றன என ஊகிப்பது கடினமா என்ன?வெறும் கற்பனைகளையும் புழுகுகளையும் கொண்டு புனையப்படட மகாவம்சத்தை வரலாறாக்கி சிங்களப் பேரினவாதம் ஆட்டம் போடுவதற்கும்இந்த "வீரர்"களின் இராமாயணக் கதையாடல்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க வேண்டும்.

எவன் சொன்னது இராம - இராவணச் சண்டை முடிந்துவிட்டதென்று?

நீங்க சொன்னது சரி...
இப்பத்தான் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கின்றது.

நன்றி நண்பரே,

'இராம'ப் பாம்புகள் எப்போதும் ஈழத்தவருக்கு எதிரிகளே. அது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டே வருகிறது.

Post a Comment

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4