« Home | இராமப் பாம்புகளும் இராவண எதிர்ப்பும் » | ஊடகப் புழுகுகள் » | புலிகளின் பதில் என்ன? » | சூரமணி பேசுகிறேன். »

India and it's dirty politics





சூளைமேட்டுக் கொலை வழக்கில்தேடப்படும்-இந்திய நீதிமன்றத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட-குற்றவாளி ஒருத்தருடன் இந்தியாவின் மேன்மைதகு பிரதமர் கைகுலுக்கும் காட்சியை விட இலங்கை விவகாரத்தில் இந்தியா செய்யும் dirty politics ஐ உறுதிப்படுத்த வேறு சான்று வேண்டுமோ.

ஏற்கனவே தனி விமானம் பிடித்து ENDLF காறர்களை இலங்கை அனுப்பியாச்சு அவர்களும் மட்டக்களப்பில் ஆடாத ஆட்டம் ஆடி கொள்ளையில் பங்குப் பிரச்சனையாகி கருணாவுடன் அடிபட்டு இப்ப யாழ்ப்பாணம் வவுனியாவில் நாள் பத்துக் கொலையும் அஞ்சாறு கொள்ளையுமாக கடைவிரித்திருக்கினமாம்

அது போதாதெண்டு பெண்பிடிகாரர் EPRLF ஐயும் அங்கே அனுப்புறதுக்கு டில்லியிலை வரதராஜப் பெருமாளோடு ஆலோசனை நடக்கிறதாம்.அவ்வளவும் இந்தியாவின் ஆசீர்வாதத்தோடு நடக்கிறது.

இங்கினை இருக்கிற இந்தியாவின் சனநாயகத் தன்மையில் சற்றும் குறை காண்கிலா இந்தியத் தேசியவாதிமார் மேலான கவனத்திற்கு இச்செய்தி சமர்ப்பணம்.

அண்ணையாணைச் சொல்லிப்போட்டன் வெங்காயத்தை உரிச்சு உரிச்சுப் பார்த்தால் கடைசியிலை ஒண்டும் மிஞ்சாது கண்ணெரிச்சல் தான் மிஞ்சும்

இந்திய அரசியல்வாதிகள் இரத்தவாடை இல்லாத 'சிங்கள-தமிழ்' கரங்களோடுதான் கைகுழுக்கவேண்டும் என்றால் நடக்காத விசயம்.வேண்டுமானால் கரங்களில் புலிநகம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு கைகுழுக்கலாம்.

அதற்காக இந்திய அரசினால் தேடப்படும் ஒருவருடன் கை குலுக்குவது இந்திய அரசை அவமதிக்கும் செயல் அல்லவா?

This comment has been removed by a blog administrator.

ஈழபாரதி...அப்படியானால் எதிர்காலத்தில் இந்திய அரசாங்கமும்,பிரபாகரனும் கைகுழுக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லுகிறீர்களா?

ராதாராகவன்....ரொம்ம்ப முக்கியம்.

செல்வமணி, உங்கள் வாதமும் பரவாயில்லை.
ஆனால் இப்போது பிரபாகரனுடன் கைகுலுக்க ஏன் தயக்கம்?
பிரபாகரனும் டக்ளசும் இந்திய சட்டத்தால் தேடப்படும் கொலைக்குற்றவாளிகள்.
ஆனால் டக்ளஸ் இந்தியாவுக்கு நினைத்த நேரத்தில் வருகிறார், ஐந்து நட்சத்திர விடுதியில் தங்குகிறார், அரச உயரதிகாரிகளைச் சந்திக்கிறார், ஊடகங்களில் பேட்டிகூடக் கொடுக்கிறார்.
இதோ இப்போது வெளிநாடொன்றில் வைத்துப் பிரதமரையே சந்திக்கிறார்.

ஆனால் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு, அந்தக் கொள்கைக்காகவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக்கூட அரசுமட்டத்தில் சந்திக்க முடியாத மர்மம் என்ன?

எல்லார் கையும் நேரடியாக இரத்தக்கறை படிந்தவையல்லவே?
சரி இரத்தக்கறை படியாத ஈழவேந்தனையும் கஜேந்திரனையும் பத்மினி சிதம்பரநாதனையும் இன்னும் பலரையும் சந்திக்க என்ன தயக்கம்?
;-)

They need Enemy of Enemy. OUR PM is in the Hand of South block.

‘இரத்தக்கறை படியாத ஈழவேந்தனையும் கஜேந்திரனையும் பத்மினி சிதம்பரநாதனையும் இன்னும் பலரையும் சந்திக்க என்ன தயக்கம்?’

என்ன சொல்லுகிறீர்கள்? இவர்கள் மக்கள் பிரச்சனைகளை மட்டும் பேசுவதாக இருந்தால் இவர்களை சந்திப்பதில் என்ன பிரச்சனை? இவர்கள் போகின்ற இடத்தில் எல்லாம் LTTE-யின் பிரச்சார பீரங்கியாக செயல்படுவதால்தான் எல்லா சங்கடங்களும் வருகிறது.புலி மார்க் ‘கையுறை’ அணிந்தவர்கள் தானே?தடை செய்யப் பட்ட இயக்கங்களோடு பேச்சுவார்த்தைகளை துவக்க சில பூர்வாங்க ஏற்பாடுகளை முதலில் செய்யவேண்டும். அதற்கெல்லாம் LTTE தயாரில்லை என்பதுபோல் தான் உள்ளது.

‘டக்ளஸ் இந்தியாவுக்கு நினைத்த நேரத்தில் வருகிறார், ஐந்து நட்சத்திர விடுதியில் தங்குகிறார், அரச உயரதிகாரிகளைச் சந்திக்கிறார், ஊடகங்களில் பேட்டிகூடக் கொடுக்கிறார்’

TNA உறுப்பினர்கள் மட்டுமென்ன? எத்தனை முறை ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார்கள். தங்குவதெல்லாம் நட்சத்திர அந்தஸ்துள்ள விடுதிகளில்தான். LTTE சார்பு அமைப்புகளால் வரவேற்கப்படுகிறார்கள்.அது சார்பான ஊடகங்களில்தான் அவர்களின் பேட்டி எடுக்கப்படுகிறது.அவர்களுக்கான செலவை யார் செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான code of conduct சுலபமாக மீறப்படுகிறது…பத்மினிசிதம்பரநாதன் இந்த வருடம் மட்டும் மூன்று முறை இங்கிலாந்து பயணம் மேற்கொண்டிருக்கிறார்.பயணம் மேற்கொண்டு என்ன செய்தார்? எல்லாம் LTTE பிரச்சாரம்தான். (ஜெனிவாவில் இந்த வருட துவக்கத்தில் LTTE ஆதரவு பெற்ற ஒரு மனித உரிமை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு கஜேந்திரன் MP கலந்துகொண்டார். சிறப்பு அழைப்பாளர்…EU வெளியுறவு அதிகாரி Ms பெராடொ வால்னெர். அது ஒரு pro-Ltte அமைப்பு என்று தெரிந்து அவர் கலந்துகொள்ளாமல் திரும்பினார்.)
ஈழவேந்தனுக்கு சென்னையில் விமானம் ‘ஏறிய’ அனுபவத்தைவிட ‘ஏற்றப்பட்ட’ அனுபவம்தான் இருக்கும்.

‘பிரபாகரனும் டக்ளசும் இந்திய சட்டத்தால் தேடப்படும் கொலைக்குற்றவாளிகள்’

பிரபாகரன் சரி….டக்ளசுமா? சூளைமேடு சம்பவத்தில் டக்ளஸ் விசயங்கள் சட்டப்படி முடிக்கப்பட்டுவிட்டதாக(!) படித்த ஞாபகம். மேல் விவரங்கள் இருந்தால் கூறவும்.தெரிந்துகொள்கிறோம். போராளி குழுக்கள் தமிழ்நாட்டில் நடமாடிய காலத்தில் நடைபெற்ற குழுகளுக்கிடையேயான துப்பாக்கி சூடு,மற்றும் மோதல்சம்பவங்கள் சம்பந்தமாக போடப்பட்ட பெரும்பாலான வழக்குகள் ஒரு வழியாக(?) முடிக்கப் பட்டுவிட்டதாக தெரிகிறது.சில வழக்குகள் எதிர்கால தேவை கருதி ஆறப்போட போட்டிருக்கலாம்.இதெல்லாம் ஒரு அரசாங்கம்,நாட்டின் பாதுகாப்பை யோசித்து முடிவு செய்வது.இதையே மற்றவர்கள் செய்யும் போது அரசியல் சாணக்கியம் என்று சொல்லுவது...இந்தியா செய்யும் போது...அது என்ன..'றோவின்ற சதி'...என்று சொல்லுவது...கொடுமைடா சாமி. ( இந்த ‘றோவின்ற சதி’ யை வான்கூவரிலிருந்து ரிசியின் ‘ஜேம்ஸ் பாண்ட்’ கதைகளோடு கேட்பதற்கு சுவராஜியமாக இருக்கும்)

‘ஆனால் இப்போது பிரபாகரனுடன் கைகுலுக்க ஏன் தயக்கம்’

ராஜீவ் கொலைவழக்குதான் என்று சொன்னாலும்…உண்மையான காரணமாக நான் நினைப்பது LTTE-யின் இந்தியாவுடனான மோதல் போக்கே. இந்த மோதல் போக்கு ராஜீவ் மரணத்திற்கு முன்பே துவங்கிவிட்டது.இந்த மோதல் போக்கை ஆரம்பத்தில் design செய்த புத்திசாலி யார் எனத் தெரியவில்லை.ஒரு பெரிய நாடு தன்னை சுற்றியுள்ள சிறிய நாடுகளின் அரசியல் நடவடிக்கைகளில் சில காரணங்களுக்காக இயல்பாகவே தலையிடக்கூடிய சூழ்நிலைதான் நிலவுகிறது. இப்படியான தலையீட்டை நியாயம் என்று நான் கூறவில்லை.இருக்கின்ற யதார்த்தத்தை கூறுகிறேன். பல நாடுகளை எல்லைகளாக கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகள், compact nuclear devices எல்லாம் வந்துவிட்டதாக சொல்லப்படும் இந்த காலக்கட்டத்தில் தன் பாதுகாப்பைத்தான் முதலில் பார்க்கும். அதற்கேற்றவாறுதான் தன் அரசியல் மற்றும் உளவு நடவடிக்கைகளை அரங்கேற்றும். இது எல்லா நாடுகளும் இயல்பாக செய்வது. எதிர்காலத்தில் தமிழீழம் அமையுமானால் பொட்டு அம்மானும் இதையேதான் செய்வார். சீனாவுடனோ அல்லது இஸ்ரேலுடனோ மேசைக் கடியில் கைக்குலுக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம். LTTE தன் அரசியல் பாணியையும்,அணுகும் முறையையும் மாற்றிக் கொண்டால் பிரபாகரனோடு…இல்லை LTTE யுடன் கைகுலுக்க வாய்பிருக்கிறதாக நான் நினைக்கிறேன்.

செல்வமணி,
டக்ளஸ் 5 நட்சத்திர விடுதியில் தங்குவதைப் பற்றிச் சொன்னது, அவர் தேடப்படும் குற்றவாளியாக இருந்தும் எப்படி முடிகிறது என்ற தொனியில்.
நீங்கள் இலாவகமாக அதைத் திசைதிருப்பி விட்டீர்கள்.

சூளைமேட்டுச் சம்பவம் சட்டரீதியில் முடிக்கப்பட்டுவிட்டதா?
அப்படியானால் சென்றமாதம்கூட வை.கோ மன்மோகன் சிங்கிடம் இதுபற்றி நேரடியாக முறைப்பட்டதோடு பகிரங்கமாகவும் அறிக்கை வெளியிட்டாரே?

நீங்கள் சொல்வதின்படி குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க முடியாதென்றால் வடக்கு - கிழக்கில வாழும் ஈழத்தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் என்று யாரையுமே சந்திக்க முடியாதே?
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அப்பிரதிநிதிகள் புலிகளை ஏகப் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டது அவர்களின் அரசியல். அந்த கொள்கைக்காகத்தான் அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டார்கள்.

எனவே நேரடியான அர்த்தப்படி இந்தியா வடக்கு - கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க விரும்பவில்லையென்பதே உண்மை. இந்தியா இன்னும் தனது எண்பதுகளின் தொடக்க 'இராஜ தந்திரத்தை'ப் பிரயோகிக்கப் பார்க்கிறது. அன்றாவது புலிகளுக்கு மாற்றுச் சக்தியென்று சொல்லத்தக்களவில் சிலர் இருந்தார்கள். இன்று நிலைமை வேறு.

இப்போது 'தமிழினத் தலைவர்' கருணாநிதி ஈழத்தவருக்கு அடித்த ஆப்பு ஆக உச்சபட்சம்.
பலமற்றவன் பணிந்தே போக வேண்டும். உண்மையை உரத்துச் சொல்லக்கூட முடியாதபடி ஈழத்தமிழர் தரப்பை அரசியல் தடுக்கிறது.

'சூளைமேட்டுச் சம்பவம் சட்டரீதியில் முடிக்கப்பட்டுவிட்டதா?
அப்படியானால் சென்றமாதம்கூட வை.கோ மன்மோகன் சிங்கிடம் இதுபற்றி நேரடியாக முறைப்பட்டதோடு பகிரங்கமாகவும் அறிக்கை வெளியிட்டாரே?'

அப்படியா? அந்த அறிக்கை பற்றிய சுட்டி இருந்தால் கொடுக்கவும்.அந்த பிரச்சனை ஒரு மாதிரி சமாளிக்கப் பட்டமாதிரி பத்திரிக்கையில் படித்த நினைவு.தேடலாம்.


'மக்களால் தெரிவு செய்யப்பட்ட அப்பிரதிநிதிகள் புலிகளை ஏகப் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டது அவர்களின் அரசியல். அந்த கொள்கைக்காகத்தான் அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டார்கள்.'

அதெல்லாம் இலங்கைக்குள்ளே..இலங்கைமக்களுக்காக..இந்தியாவை கட்டுப்படுத்தாது.

'அன்றாவது புலிகளுக்கு மாற்றுச் சக்தியென்று சொல்லத்தக்களவில் சிலர் இருந்தார்கள். இன்று நிலைமை வேறு.'

அவ்வாறா சொல்லுகிறீர்கள்? இன்றைய காலக் கட்டத்தில்தானே புலிஎதிர்ப்பை வெளிப்படையாக காண்கிறோம்.பல புலி விமர்சன பத்திரிக்கைகள்,வலைத்தளங்கள் என்று நிறைய பார்க்கிறோம்.ஆனந்த சங்கரி போன்ற ஆட்கள் நிறைய பேசுகிறார்கள்.பல நாடுகளில் தடை. பெரிய ஆச்சரியம்...கருணா இன்னமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.இன்று நிலமை வேறு என்று எப்பிடி சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை.

'இப்போது 'தமிழினத் தலைவர்' கருணாநிதி ஈழத்தவருக்கு அடித்த ஆப்பு ஆக உச்சபட்சம்.'

இலங்கை பிரச்சனையில் கருணாநிதி,வைகோ,பழ.நெடுமாறன்,ஜெயலலிதா போன்றவர்களால் எதுவும் செய்யமுடியாது.சும்மா அவர்களுடைய அரசியலுக்காக பேசுவார்கள்.நிலமை கைமீறி போய்க்கொண்டிருக்கிறது.இலங்கை பிரச்சனையில் பாக்கிஸ்தான் தலை தெரிந்துவிட்டது.சீனாவின் ஆர்வம் தெரியத் தொடங்கிவிட்டது.அமெரிக்கா சூழ்நிலையை கவனிக்கத் தொடங்கிவிட்டது.புனர் வாழ்வு என்று பணத்தை வைத்துக்கொண்டு ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கிறது.இந்திய வெளியுறவு மற்றும் உளவுத்துறை மண்டையை பிய்த்துக்கொள்கிறது.இது தமிழ்நாட்டுக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது போக இப்பொது இந்தியப்பிரச்சனையாக மாறிவிட்டது.

இந்தியா என்னதான் செய்யப்போகிறது?

இந்தியா தன் தெற்கு எல்லைக்காக இன்னொறு 'Military budget' போடாது.

Post a Comment

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4