« Home | யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது? » | புலிகளா பயந்தாங்கொள்ளிகள்? » | India and it's dirty politics » | இராமப் பாம்புகளும் இராவண எதிர்ப்பும் » | ஊடகப் புழுகுகள் » | புலிகளின் பதில் என்ன? » | சூரமணி பேசுகிறேன். »

மாற்றுக்கருத்து மாணிக்கத்தின் மடத்தனம்

வாகரையிலிருந்து புலிகள் வெளியேறியதை மையமாக வைத்து செய்தித் தொகுப்பொன்று மாற்றுக்கருத்து மாணிக்கத் தளமான தேனியில் உள்ளது.

வாகரையை கைப்பற்றியதா இராணுவம் அறிவிப்பு: கிழக்கில் முக்கிய தளங்களை இழந்து வெளியேறும் புலிகள்


என்ற தலைப்பில் அத்தொகுப்பு இருக்கிறது.

தொகுப்பில் பிரச்சினையில்லை. ஆங்காங்கே சொல்லப்பட்டவற்றைத் தொகுத்துச் சொல்லியுள்ளார்கள்.
ஆனால் அதில் ஒரு படம் போட்டுள்ளார்கள் பாருங்கள்.
இப்பதிவு எழுதப்படும்வரை அப்படம் இருந்தது.

கொல்லப்பட்டடி சிலரது உடல்கள் வயல்வெளியொன்றில் இருக்கின்றன. அதைச்சுற்றி பலர் நிற்கிறார்கள்.

செய்தித் தொகுப்புக்குச் சம்பந்தமாக புலிகள் கொல்லப்பட்டுக்கிடக்கும் படத்தைப் போட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால், வண்டவாளம் தெரிகிறது.

அப்படத்தில் கொல்லப்பட்டுக் கிடப்பவர்கள் சிங்கள இராணுவத்தினரும் கருணா கும்பலைச் சேர்ந்தவர்களும். சுற்றி நிற்பவர்கள் விடுதலைப்புலிகள்.

சில மாதங்களின் முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வாகனேரிக்குள் பெருமெடுப்பில் ஊடுருவலொன்றைச் செய்தன சிங்கள அரசபடையும் கூலிப்படையும். அது சம்பூர், மூதூர் பிரச்சினைகளுக்கும் முன்பு.
அதை வெற்றிகரமாக முறியடித்து பலரைக் கொன்று பல சடலங்களையும் கைப்பற்றியிருந்தனர் புலிகள். சிங்கள அரசு மிகவும் மூக்குடைபட்ட தாக்குதலது.
அத்தாக்குதலில் கொல்லப்பட்ட படையினரனும் கருணா கும்பலதும் சடலங்களைச் சுற்றி புலிகள் நின்று எடுத்து வெளியிட்ட படம்தான் தற்போது தேனியில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தித்தொகுப்போடு உள்ளது.

புலிப்பாசிசத்த எதிர்க்கவெண்டு உலகத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை நட்சத்தி்ரமான தேனிக்காரர் உப்பிடி சின்னப்பிள்ளைத்தனமா நடக்கலாமோ?

உடன அந்தப்படத்தை எடுத்துப்போட்டு, எங்கயாவது புலிகள் செத்துக்கிடக்கிற படத்தைப்போட்டு விடுங்கோ.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4