Monday, September 25, 2006

India and it's dirty politics





சூளைமேட்டுக் கொலை வழக்கில்தேடப்படும்-இந்திய நீதிமன்றத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட-குற்றவாளி ஒருத்தருடன் இந்தியாவின் மேன்மைதகு பிரதமர் கைகுலுக்கும் காட்சியை விட இலங்கை விவகாரத்தில் இந்தியா செய்யும் dirty politics ஐ உறுதிப்படுத்த வேறு சான்று வேண்டுமோ.

ஏற்கனவே தனி விமானம் பிடித்து ENDLF காறர்களை இலங்கை அனுப்பியாச்சு அவர்களும் மட்டக்களப்பில் ஆடாத ஆட்டம் ஆடி கொள்ளையில் பங்குப் பிரச்சனையாகி கருணாவுடன் அடிபட்டு இப்ப யாழ்ப்பாணம் வவுனியாவில் நாள் பத்துக் கொலையும் அஞ்சாறு கொள்ளையுமாக கடைவிரித்திருக்கினமாம்

அது போதாதெண்டு பெண்பிடிகாரர் EPRLF ஐயும் அங்கே அனுப்புறதுக்கு டில்லியிலை வரதராஜப் பெருமாளோடு ஆலோசனை நடக்கிறதாம்.அவ்வளவும் இந்தியாவின் ஆசீர்வாதத்தோடு நடக்கிறது.

இங்கினை இருக்கிற இந்தியாவின் சனநாயகத் தன்மையில் சற்றும் குறை காண்கிலா இந்தியத் தேசியவாதிமார் மேலான கவனத்திற்கு இச்செய்தி சமர்ப்பணம்.

அண்ணையாணைச் சொல்லிப்போட்டன் வெங்காயத்தை உரிச்சு உரிச்சுப் பார்த்தால் கடைசியிலை ஒண்டும் மிஞ்சாது கண்ணெரிச்சல் தான் மிஞ்சும்

Tuesday, September 19, 2006

இராமப் பாம்புகளும் இராவண எதிர்ப்பும்

புலிகள் கிறித்தவர்களா இந்துக்களா என்று ஒருவர் அதி முக்கியமான கேள்வியை எழுப்பி, அவர்கள் கிறித்தவர்கள் என்று முடிவும் கொடுத்துவிட்ட கட்டுரையொன்றைப் போட்டிருந்ததோடு பின்னூட்டத்தில் அதுவே தனது கருத்தும் என்பதை வெளிப்படுத்தியருந்தார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு சந்தியா ஜெயின் இந்த்துவ இயக்கங்களால் புகழப்படும் 'அறிவி ஜீவி'எழுதிய கோமாளித்தனமான கட்டுரைக்கும் இதற்கும் எந்த வித்தியாசமுமில்லை.
ஆனால் பின்னூட்டங்களில் வந்த சில விசயங்கள் இவர்களின் புலிகள் மீதான இக்குற்றச்சாட்டுக்கும் வயிற்றெரிச்சலுக்குமான காரணத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டன.கீற்று இதழில் வந்த ஒருவிசயத்தைக் குறிப்பிட்டு அதைவைத்துப் புலிகளை இந்துத்துவ எதிர்ப்புவாதிகளாகக் காட்டி, அப்படியே கிறித்தவ இயக்கமாகவும் காட்டியிருந்தார்கள்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து சிங்கள அரசதரப்பாற் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கலைஞன் -கவிஞன் பொன் கணேசமூர்த்தி ஒரு நாடகம் எழுதினார். 'இலங்கை மண்' என்பது அதன்பெயர். அதன் சிலபகுதிகள் நாட்டுக்கூத்து வடிவிலும் எழுதப்பட்டன. இராமாயணப் பொய்மையைக் கட்டுடைக்கும் ஒரு கோணம் அதில் இருந்தது. வானொலி நாடகமாக ஒலிபரப்பப்பட்டதுடன் நூல் வடிவிலும் வெளியிடப்பட்டது. அந்நூலுக்கு இளங்குமரனும் (பேபி சுப்பிரமணியம்) பிரபாகரனும் வாழ்த்துரை எழுதியிருந்தனர்.

இங்கு புலிகளை கிறித்தவ அமைப்பென்று கட்டுரை பொறுக்கிப்போட்டு பின்னூட்ட விளம்பரம் செய்தவர்களுக்கு சூத்தில் காஞ்சோண்டி பூசிய எரிவைத் தந்தது இந்த நாடகம் தான். இராமனை வில்லனாகவும் இராவணனை நாயகனாகவும் வைத்து எழுதப்பட்ட நாடகம் இவர்களுக்கு சுள்ளென்ற கோபத்தைக் கொடுக்கிறதென்றால் இந்தப் பாம்புகள் எந்தப் புற்றிலிருந்து வருகின்றன என ஊகிப்பது கடினமா என்ன?வெறும் கற்பனைகளையும் புழுகுகளையும் கொண்டு புனையப்படட மகாவம்சத்தை வரலாறாக்கி சிங்களப் பேரினவாதம் ஆட்டம் போடுவதற்கும்இந்த "வீரர்"களின் இராமாயணக் கதையாடல்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க வேண்டும்.

எவன் சொன்னது இராம - இராவணச் சண்டை முடிந்துவிட்டதென்று?

Saturday, September 02, 2006

ஊடகப் புழுகுகள்

2006ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஜோக் சிறீ லங்கா அரசு முல்லைதீவு விமான தாக்குதல் பற்றிய படம். இந்த படத்தை போர்நிறுத்த குழுவினர் எற்கனவே நிராகரித்து விட்டனர். போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் ஜெமினி அல்லது ஜெயதேவன் போன்று கத்துக்குட்டிகள் அல்ல. முறையாக இராணுவப்பயிற்சி பெற்ற இராணுவ தளபதிகள். ஆனால் இந்த கத்துக்குட்டி பத்திரிகையாளர்கள் எல்லாம் சிந்திப்பது தாங்கள் ஏதோ சண்டே ரைம்ஸ் இக்பால் அத்தாஸ் என்று. பாவம் இப்ப அந்த நபருக்கும் தகவல்கள் மிக கம்மியாகவே வருகிறது. இந்த லட்சணத்தில் ஜெமினி ஒரு பெரிய ஜோக் அடித்திருக்கிறார்.

நேற்று கிளாலியில் புலிகள் 100பேர் பலியானதாகவும் அவர்களின் படங்களை தன்னை தவிர யாரும் போடவில்லை என்று. அட பாவி! இலங்கை இராணுவத்தின் இணையத்தளத்தில் கூட வராத படங்கள் உனக்கெப்படி கிடைச்சது?. தம்பி டேய் ஜெமினி நீ வெகுவிரைவில் இரண்டாவது இக்பால் அத்தாஸ்தான். இராணுவத்திலை அவ்வளவு செல்வாக்கு. இராணுவ தலைமையகத்திற்கு அவங்கள் செதி அனுப்ப முதல் யேர்மன் ஸ்ருட்காட்டுக்கு போன் பண்ணி உன்றை மனிசியிற்றை அவங்கள் தகவல் சொன்ன பிறகு தான் கொழும்புக்கே தகவல் சொல்லுறாங்கள் ஆக்கும்.

புலிகளின் உடல்களை ஐசிஆர்சியிடம் இந்தா குடுக்கிறம் அந்த குடுக்கிறம் எண்டு இராணுவம் வேடிக்கை காட்டிப்போட்டு பாவம் அப்பாவியள் 21பேரின்றை பிரேதத்தை பொலீசார் எடுத்திச்சினம் என்டு ஒரு செய்தி வந்தது. நாங்களும் இப்ப இரண்டு நாளா புலியளின்றை 90 சடலப் புகைப்படத்தை தேடிறம். ஒரு இடமும் அகப்படவில்லை. ஆனா ஜெமினிக்கு மட்டும் எங்கையோ கிடைச்சிட்டுது. நாங்கள் இந்த படத்தை நல்ல பெரிசா எங்கடை கணனியிலை போட்டு பாத்தா எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியாத ஒரு நல்ல பகிடி தெரிஞ்சுது. புலியளாலை ஒரு காலத்திலை கொல்லப்பட்ட இராணுவத்தின்றை சடலங்களை அப்படியே உல்ட்டா பண்ணி ஜெமினி அதை புலியள் என்டு போட்டிருக்கிறார். அது மட்டுமில்லை இவர் அவசரத்திலை படத்தின்றை பேரையும் மாத்த மறந்திட்டார். அட அதை தான் விடு அவருக்கோ இதிலை கோவமும் எல்லே வருது. மற்றைய இணைய தளம் ஒண்டும் அந்த படத்தை பிரசுரிக்கேல்லையாம். தாங்கள் தான் ஒரு மிகவும் உண்மையான ஜனநாயகமான ஊடகம் துணிந்து பிரசுரிச்சிரிக்கினமாம்.

அட பாவி மனிசா புலியை எங்களுக்கும் தான் பிடிக்காது. அதுக்கு இப்பிடி மானங்கெட்ட பிழைப்பு நடத்தவேணுமே. சிறீ லங்கா இராணுவம் கூட இந்த அளவு சிந்திக்கேல்லை. அனால் உமக்கு மட்டும் ஏன் இப்பிடி ஒரு ஆசை. தம்பி ஜெமினி நீ உண்மையிலை நடிகன் ஜெமினி தான்றா. ஆனால் அவன் உன்னை விட பரவாயில்லை நாலு பெண்டாட்டியை பிடிக்க அவன் பல பொய் சொன்னான். ஆனால் நீ உன்றை மனச்சாட்சியை விக்க இப்பிடி புழுகிறாய்.

நன்றி: தேனீ

புலிகளின் பதில் என்ன?

சிங்கள இனவெறியர்களால் குறைந்தது நாளுக்கு 20 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்! எங்கே யுத்தநிறுத்தம்? புலிகளின் பதில் என்ன? தமிழ்மக்கள் அங்கலாய்ப்பு!

- டேவிட்ஸரன் லண்டன்


சிறீலங்காவின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஸ பதிவியேற்றதிலிருந்து சிறிது சிறிதாக சமாதானத்துக்கான கதவுகள் மூடப்படத் தொடங்கின. இதன் பின்னணி மகிந்த ராஜபக்ஸவுடன் சூழவிருக்கும் ஜே.வி.பி, ஜாதிககெல உறுமைய தானென்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் இவர்களே தானென்று மகிந்த ராஜபக்ச ஆரம்பத்தில் கூறினாலும் சம காலத்தில் பல திரைமறைவு வேலைகளை முழு வீச்சில் முடுக்கி விட்டார். முழுவீச்சில் கட்டியெழுப்பப்பட்ட சிங்கள இராணுவ கட்டமைப்பு இன்று தனது கோர முகங்களை அப்பாவி தமிழ் மக்கள் மீது காட்டத் தொடங்கியுள்ளது.

ஆரம்பத்தில் ஓரிரு தமிழ் மக்களின் கொலைகளாகத் தொடங்கிய அடக்குமுறைப்பூதம் தற்போது தமிழ் மக்களின் பூர்வீக இருப்பிடங்கள் மீது இராணுவத் தாக்குதல்கள், விமானக் குண்டு வீச்சுக்கள் என்று பாடசாலைகள், வழிபாட்டுத்தலங்கள் கூடத் தப்ப முடியவில்லை. அண்மைக்காலங்களாக அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள், பாடசாலைச் சிறுவர்கள், அப்பாவி மக்கள் வகை தொகையற்று சிங்கள இராணுவத்தால் கொண்றொழிக்கப்படுவதும் அவர்களுக்கு புலிச்சாயம் பூசுவதும் வழமையாகியும் விட்டது. எல்லாவற்றிக்கு மேலாக கிழக்கு மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை கைப்பற்றுவதற்கும் பாரிய முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அவற்றில் சில வெற்றிகளையும் பெற்றிருக்கிறது. இவை எல்லாவற்றையும் சர்வதேசம் பார்த்தும் பாராமுகமாக இருக்கின்றது. இன்றைய நிலையில் ஒரு நாளைக்கு சராசரியாக 20 தமிழ் மக்கள் தங்கள் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசத்தில் சிங்களப் படைகளினால் கொல்லப்பட்டும், காணாமலும் போயும் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் யுத்த நிறுத்தத்தை புலிகள் கைவிடாதபடி சர்வதேச அழுத்தங்களை புலிகள் மீது தொடர்ந்து பிரயோகிக்கவும் சிறீலங்கா அரசு தவறவுமில்லை. இதன்படி தென் இலங்கையை யுத்தமற்ற பூமியாகவும், வட கிழக்கை இரத்த ஆறு ஓடும் பூமியாகவும் சாதுரியமாக மாற்றியிருக்கிறது சிறீலங்காவின் சிங்கள ஆட்சியாளர்கள். இச்சூழ்நிலையில் புலத்திலும், தாயகத்திலும் தமிழ் மக்கள் விரக்தியின் உச்சத்துக்கு சென்றிருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இச்சு10ழ்நிலை தொடருமாயின் புலத்தில் புலிகளின் மக்கள் ஆதரவுகள் மிகப் பாதிக்கப்படுவது மட்டுமின்றி புலிகளின் நிதி சேகரிப்புகள், பிரச்சாரங்கள் பாரிய அளவில் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது.

உலகில் பலஸ்தீனத்திலோ, லெபனானிலோ, காஸ்மீரிலிலோ நிகழ்ந்தவைகள்-நிகழ்பவைகளே சர்வதேசம் எங்குள்ளது என்ற கேள்விக்கு பதிலாக அமையும். இன்றைய சு10ழ்நிலையில் ஈழத்தில் புலிகளின் பலத்தில் தான் சர்வதேசத்தின் கரிசனையும் எமை நோக்கி திரும்ப வாய்ப்புள்ளது. புலிகள் இன்றைய சந்தர்ப்பத்தில் ஈட்டும் இராணுவ வெற்றிகளே தமிழர்களின் சர்வதேச அரசியலையும் தீர்மாணிக்கும் சக்தியுமாக்க உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையுமாகும். இவைகளுக்கான விடைகளை புலிகளிடம் இன்று தமிழ் மக்கள் எதிர் பார்க்கிறார்கள். இவற்றிற்கு புலிகளின் பதில்களாக தெற்கில் பல களங்களை திறக்கப் போகிறார்களா? தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களிலிருந்து அடித்து விரட்டப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் எனும் போர்வையில் இராணுவ குடியேற்றங்களாக்கப்பட்ட பிரதேசங்களை மீட்கப் போகிறார்களா? இல்லை ஒட்டு மொத்த சிங்களப் படைகளை தமிழர் தாயகத்திலிருந்து விரட்டியடிக்கப் போகிறார்களா? ... வரும் நாட்களில் தமிழர்களின் மொழி சிங்கள தேசத்துக்கு எவ்வாறு செல்லப் போவதிலேயே, சிங்கள இனவெறியாளர்களின் இன அழிப்புக்கள் முடிபுக்கு வர வாய்ப்புள்ளது.

நாங்கள் மாற்றுக்கருத்துகள் கொண்டவர்கள்தாம். புலிகளின் நடவடிக்கைகளை கையைக் கட்டிக் கொண்டு ஆதரிக்கவுமில்லை. ஆனால் புலிகளுக்காக தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட வேண்டுமென்ற வரலாற்றுத் துரோகத்தையும் செய்ய நாங்கள் தயாருமில்லை. இன்று மாற்றுக்கருத்தாளர்கள் நாமென்று எதிரியுடன் சேர்ந்து எம்மக்களுக்கு எதிராக ஆயுதங்களை தூக்கி எம்மக்களை படுகொலை செய்யும் வரலாற்றுத் துரோகிகளாக மாறவும் நாம் தயாரில்லை. இன்றைய சு10ழ்நிலையில் எமது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நாம் எமது பூரண ஆதரவினை தெரிவிக்கின்றோம். அது காலத்தின் கட்டாயமும் கூட. இதனிலிருந்து நாமும் விடுபட விரும்பவில்லை.


நன்றி: தேனி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4