Wednesday, August 30, 2006

சூரமணி பேசுகிறேன்.

வணக்கம்
நான் சூரமணி பேசுகிறேன்.

என்னைப்பற்றி போகப்போகத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. இப்போதே தெரிந்து கொள்ளலாம்.
நானொரு பயந்தாங்கொள்ளி.

சூரமணி என்பதால் சூரத்தனமாக இருப்பேன் என்று நினைத்தீர்களா?
பெயரில் 'வீரம்' வைத்திருப்பவரெல்லாம் வீரர்களா?

ஞானசவுந்தரி நாட்டுக் கூத்தில் ஒரு பாட்டு வரும்.

"சூரர் வீரர் நாமையா -வெற்றி மிகும்
சூரர் வீரர் நாமையா....

செத்த பாம்பைக்கண்டு மிக்க மகிழ்ச்சிகொண்டு
மெத்தப் பெரியபொல்லால் மேனி அடித்துநின்று
சுண்டு விரலைக்காட்டி சூரக் கதைகள்பேசும்
தன்ன தனனதன்னா தன்னான தன்னானா... "


இப்படிப்பட்ட சூரன்தான் "சூரமணி" என்று பெயர் வைத்திருக்கிறேன்.

இப்போதே என்னைப்பற்றித் தெரிந்துகொண்டீர்களா?

என்ன எழுதப்போகிறேன் என்று தெரியுமா?
அதை போகப்போகத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
;-)

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4